விடியும் முன்னே
விரிசல்களில் எட்டிப் பார்க்கும்
வெளிச்சம்...
உறக்கங்களை உதறிக் கொண்டு
வாசலுக்கு
வரும் விழிகள்
வழக்கம் போலவே
நீ தலை சீவிய காற்று
என்னை மட்டும்
தொடாமல்...
தொடரவும் முடியாமல்
நான்!
தூக்கங்களைத் தூக்கிக் கொண்டு
போர்வைக்குள் ஒளிந்தால்
மீண்டும் மீண்டும்
உன் பாதச் சப்தங்கள்
விரல்களோரம் கவிதை தேடும்
இரவு முழுவதும் உறங்காத
கவிதை தாள்கள்
அறையெங்கும்!
பார்த்தாயா
என்னைப் போலவேதான்
இரவும் உறங்கவில்லை!!!!
Friday, 1 April 2011
Subscribe to:
Posts (Atom)