Saturday 26 November 2011

¾É¢¨Á

«ÄÈ¢ «ÄÈ¢ «¼í¸¢Å¢ð¼É

¦ºø§Àº¢ «¨ÆôÒ¸û...

§Á¨ƒÂ¢ø ¨Åì¸ôÀð¼ ¯½×

þýÛõ º£ñ¼ôÀ¼¡Á§Ä§Â!

¸¾¨Åò ¾ðÊò ¾ðÊ ¸¨ÇòРŢð¼Ð

¨¸..

§Àºò ÐÊìÌõ ÁÉÍ

¿¡ü¸¡Ä¢Â¢ø ¯ð¸¡Ã ܼ «¼õ À¢Ê츢ÈÐ..

¾É¢¨Á¨Â Å¢ÃðÎõ ÓÂüº¢Â¢ø

§¾¡üÚô§À¡ö ¯ð¸¡÷ó¾¢Õ츢ÈÐ

¦¾¡¨Ä측ðº¢...

Ó¾ýӾġ¸...

Á¢ý¾¨¼¨Â ±¾¢÷À¡÷ìÌõ ¸ñ¸û...

Ó¸áÖìÌû ãú¸¢ô §À¡É

Á¸É¢¼õ.....

þýÈ¡ÅÐ §Àº ÓÊÔÁ¡ ????????

Wednesday 18 May 2011

தொடரும்..............

காலாற கடற்கரைகளில் நடந்து கொண்டுதான்
இருக்கிறேன்....
கடல்நீர் கற்பனையைத் தாண்டி
காலை நனைத்துக் கொண்டே வருகிறது...
கரையில் கூக்குரல்கள்...
என்னைக் கரையேறச் சொல்லி!!!!
எல்லாமே காதுக்குத் தெளிவாய் கேட்கிறது...
ஏற்றமா இறக்கமா எனத் தெரியாமல்
நீருக்குள்  இறங்குகிறேன்..
முன்னைவிட வேகமாக ஒலிக்கும் குரல்கள்
கைக்கெட்டிய தூரத்தில் இருந்தும்
கைப்பிடித்து இழுக்க எவருமே இல்லை..
உயிரைக் காப்பாற்றிக் கொள்ள
ஒவ்வொருவரும் துடிக்கும் அந்த விடியற்காலையில்
நான் மட்டும்.......
உன்னைத் தொலைத்த அதே கடலில்!!!

Monday 16 May 2011

காத்திருப்பு

பாவம்....
வெள்ளிக்கிழமைகளில் மட்டும்தான்
நீ
கோவில் வருவாய் எனத் தெரியாமல்
ஒவ்வொரு நாளும் முழங்கிக் கொண்டிருக்கிறது
கோவில் மணி!

Saturday 14 May 2011

தேடல்

இணைய உலாவிகளில்
இன்னும் தொலைந்து கொண்டேதான்
இருக்கிறேன்.....
தேடல் இயந்திரங்களில்
உன் பெயர்
தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது..
நீ மட்டும்தான்
இன்னும் தென்படாமல்!
முகநூல்களில் உன்னைத் தேடி
விரல்கள் எல்லாம் விறைத்துக் கொண்டன
உன் முகம் மட்டும்
முகவரி எழுதப்படாமல்...

பள்ளித் தெருக்களில்
உன் பாதச் சுவடுகளை
வரைந்து வரைந்து பார்த்ததை
மனம் இன்னும்
பத்திரமாய் வைத்திருக்கிறது..
ஒற்றைச் சடையில் உட்கார்ந்த
அந்தக் காற்றை
விரட்டிய பொழுதுகள்...
இன்னும் நனவின் விளிம்புகளில்!
கண்ணால் மட்டுமே
காதல் சொன்ன.... உன்
அந்தக் கடைசி நிமிடங்களை
இன்னும்
கைகளில் கெட்டியாகப் பிடித்திருக்கறேன்!

தேடல் இயந்திரங்களில்
உன்னைத் தேடும் இரவுகளை
நான் விடப் போவதில்லை..
அயல் தேசத்தில்
நீ அடைக்கலமான பிறகும்!!

14 மே 2011

Friday 1 April 2011

விழிக்காத கனவுகள்..

விடியும் முன்னே
விரிசல்களில் எட்டிப் பார்க்கும்
வெளிச்சம்...
உறக்கங்களை உதறிக் கொண்டு
வாசலுக்கு
வரும் விழிகள்
வழக்கம் போலவே
நீ தலை சீவிய காற்று
என்னை மட்டும்
தொடாமல்...
தொடரவும் முடியாமல்
நான்!


தூக்கங்களைத் தூக்கிக் கொண்டு
போர்வைக்குள் ஒளிந்தால்
மீண்டும் மீண்டும்
உன் பாதச் சப்தங்கள்
விரல்களோரம் கவிதை தேடும்
இரவு முழுவதும் உறங்காத
கவிதை தாள்கள்
அறையெங்கும்!

பார்த்தாயா
என்னைப் போலவேதான்
இரவும் உறங்கவில்லை!!!!

Friday 25 March 2011

புரியாத சில விசயங்களும் புளித்துப் போன காரணங்களும்

லிபியாவில் ஒரு சொந்த நாட்டு இராணுவமே மக்களைக் குண்டு வீசி தாக்குவதைப் பார்த்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை. 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்த கடாபியின் கொட்டத்தை அடக்க முடிவு செய்த 'உலக போலிஸ்' அமெரிக்காவைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதற்கு ஆதரவாக எழுந்த ஐரோப்பா, ஆசிய நாடுகளின் 'மனித தன்மையினையும்' பாராட்டாமல் இருக்க முடியாது. கடாபியின் சர்வாதிகாரத்தை அடக்க இதை விட ஒரு சிறந்த வழியும் இருக்க முடியாது. தொடர்ந்தாற்போல், மூன்று நாள்களாக 350 க்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பாவம், இந்த நாடுகளுக்கு எவ்வளவு செலவு... உலக மக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டுமென எண்ணம் கொண்டுள்ள அந்தத் தியாக நாடுகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவைதான்.  கடாபி அடங்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம் என சூளுரைத்துள்ள அந்த நாடுகளின் தலைவர்கள் எவ்வளவு நல்லவர்கள்! 
நிற்க,
இலங்கையில் நடந்ததற்கும் இப்போது லிபியாவில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் ? கடாபியைப் போலத்தான் மகிந்தாவும் தன் சொந்த நாட்டு மக்கள் விமானத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்தார்???? அதற்கும் மேலாக, அந்த நாட்டுத் தமிழ் மக்களை மிக மோசமான வகையில் கொடுமை படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது எங்கே சென்றன இந்த ஐரோப்ப அமெரிக்க நாடுகள் ??? இந்தியா என்ற தன்மானமற்ற நாடு இவர்களைத் தடுத்ததா ???  தன் நாட்டின் எல்லைப் பகுதியின் ஒரு பகுதியை இன்னும் வைத்திருக்கும் 'அந்த' அண்டை நாட்டிடம் தன் வீரத்தைக் காண்பிக்க முடியாத இந்தியாவா இந்த ஐரோப்பா அமெரிக்க நாடுகளைக் கட்டுப்படுத்தியது ??? 

*** ஒருகால் இந்தத் தமிழர் வாழும் பகுதிகளில் எண்ணெய் வளம் இல்லையா..
*** தனக்கு ஏறக்குறைய எல்லா அரபு நாடுகளும் அடங்கிப் போன பிறகு   
      இன்னும் அடங்காத அந்த லிபியாவைப் போல இலங்கை இல்லையோ..
எது எப்படியோ, புரியாத பல விசயங்களுக்கு விடை தேடிக் கொண்டிருக்கும் இந்த நாடோடிக்கு, இதுவும் புரியவில்லைதான்... யாராவது புரிந்தால் சொல்லுங்கள்...

Thursday 24 March 2011

இன்னும் புரியாத ஒரு வரலாறு....

வரலாறு தெரியுமா இவர்களுக்கு..
குண்டுச்சட்டிக்குள் புகுந்து கொண்டால்
உலகம் என்ன விட்டு விடுமா..
வரலாறுகளுக்குள் வாழ்ந்தே வேராய்
போனார்களாமே..
புராணங்களிலும் வேதங்களிலும் 
புரட்டிப் புரட்டிப் பார்த்தும் 
புரியவில்லை..
எவ்வளவு தூரம் நமக்கும் வரலாறுகளுக்கும்
சரி...
நாய்க்கூண்டில் நுழைந்தால்
கண்டிப்பாய் நாய் போல் குரைக்கத்தான் வேண்டுமா..
வரலாற்றை நினைவுறுத்த வந்தவர்கள்
விரல்களால் கொளுத்துகிறார்கள்..
நாக்கு சுடாதா என்ன??
சார்பு என்று ஆங்கிலேயனை ஒதுக்கிவிட்டால்
வரலாறு செத்து விடுமா..
கருவாடு சுட்ட வரலாறை
இலக்கியங்கள்கூட சொல்கின்றனவே..
கரையோரங்களில் களவு செய்தது
மறந்து போயிருக்கலாம்..
மெர்சிடிஸகளிலும் பி.எம்.டபுள்யுகளிலும்
அந்த ஒத்தைப் படகுகள்
காணாமல்தான் போயிருக்கலாம்...
என்ன செய்வது?
நாகரீகம் என்பது பாடமா என்ன
கற்றுக் கொடுப்பதற்கு?
தொழில்களில்தான் சாதி என்று
சொன்னால் புரியாதுதான்
அதற்காக..
புரியாமல் இருக்கட்டும்..
சுற்று வட்டத்தில் மீண்டும் 
சரித்திரம் எழுதப்படும்போது
புரியட்டும்!!!!!!